

ஐபிஎல் 2026-ன் இறுதிப் போட்டி குஜராத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டஃபி வீசிய முதல் ஓவரில் சுதர்சன் 2 பவுண்டரிகள் விளாசினார். 2-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவுரில் கில் ஒரு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை ஹேசில்வுட் வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த கில், அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் 12 பந்தில் 12 ரன்களும், சுப்மன கில் 8 பந்தில் 10 ரன்களும் எடுத்து ஏமாற்றம் அடைந்தனர். குஜராத் டைட்டன்ஸ் 26 ரன்கள் எடுப்பதற்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.