

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.
பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா சாஹலுக்குப் பதிலாக இம்பேக்ட் சப் வீரராக களம் இறங்கினார். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் பஞ்சாப் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தன. 2-வது ஓவரை ஹென்றி வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிததார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 20 ரன்கள் கிடைத்தன. 2 ஓவரில் 34 ரன்கள் அடித்தன. 3-வது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் கலீல் அகமது 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
4-வது ஓவரை கம்போஜ் வீசினார். இந்த ஓவரில் பிரப்சிம்ரன் சிங் 3 பவுண்டரிகள் விளாசினார். கம்போஜ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 4-வது ஓவரை ஹென்றி வீசினார். முதல் பந்தில் சிக்ஸ் விளாசிய பிரியான்ஷ் சிங், அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 11 பந்தில் 39 ரன்கள் குவித்தார்.
2-வது விக்கெட்டுக்கு பிரப்சிம்ரன் சிங் உடன் கூப்பர் கொனோலி ஜோடி சேர்ந்தார். 6 ஓவரில் பஞ்சாப் 1 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் குவித்துள்ளது.