IPL 2026 CSK vs DC | அரைசதத்தை சதமாக மாற்றிய சஞ்சு சாம்சன்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தனது 4-வது போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் விளாசினார்.
IPL 2026 CSK vs DC | அரைசதத்தை சதமாக மாற்றிய சஞ்சு சாம்சன்..!
Published on

ஐ.பி.எல். 2026-ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவால்டு பிரேவிஸ், குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை அகிப் நபி வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் கிடைத்தன. 2-வது ஓவரை முகேஷ் வீசினார். கடைசி இரண்டு பந்துகளையும் சஞ்சு சாம்சன் பவுண்டரிக்கு விரட்டினார். ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

3-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 4-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரில் கெய்க்வாட் ஒரு பவுண்டரியும், சஞ்சு சாம்சன் 2 பவுண்டரியும் விளாசினர். இதனால் 13 ரன்கள் கிடைத்தன. 4 ஓவரில் 40 ரன்கள் அடித்திருந்தது.

5-வது ஓவரை நடராஜன் வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரி அடித்தார். 6-வது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் இரண்டு பவுண்டரி அடித்தார். இதனால் பவர்பிளேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தது.

7-வது ஓவரை அக்சர் படேல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். அடுத்து ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். இந்த ஓவரில் சிஎஸ்கே-வுக்கு 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன. 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஆயுஷ் மாத்ரே பவுண்டரி அடித்தார். இதனால் 8 ரன்கள் கிடைத்தன.

9-வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். முதல் பந்தில் சஞ்சு சாம்சன் 1 ரன் எடுத்து அரைசதம் அடித்தார். அவர் 26 பந்தில் 9 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் அடித்த முதல் அரைசதம் இதுவாகும்.

அதன்பின் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆயுஷ் மாத்ரே 27 பந்தில் அரைசதம் அடித்தார். சஞ்சு சாம்சன் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 52 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார்.

ஆயுஷ் மாத்ரே 59 ரன்கள் அடித்திருக்கும்போது ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com