சி.எஸ்.கே.வுக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்

69 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் பின்னர், 155 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியுள்ளது.
சி.எஸ்.கே.வுக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ்
Published on

டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். 2026 தொடரின் 48-வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பதுன் நிசாங்கா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நிசாங்கா 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த நிதிஷ் ராணா 15 ரன்னிலும், கருண் நாயர் 13 ரன்னிலும், அக்சர் படேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 69 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது, ஆகவே, பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வியை இம்பேக்ட் வீரராக களம் இறக்கிறது.

6-வது விக்கெட்டுக்கு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை அணியை சரிவில் இருந்து மீட்டது.

38 ரன்கள் எடுத்த நிலையில் 19-வது ஓவரில் ஸ்டப்ஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரிஸ்வி ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. கம்போஜ் 18 மற்றும் 20-வது ஓவரில் 5 சிக்சர்கள் விட்டுக்கொடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com