ஆகாஷ் மாத்ரேவுக்கு பதிலாக சி.எஸ்.கே. அணியில் வேகப்பந்து வீச்சாளர்

ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் ஆகாஷ் மத்வாலை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆகாஷ் மத்வால்
ஆகாஷ் மத்வால்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த அதிரடி இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக விலகியுள்ளார். ஏற்கனவே கலீல் அகமதுவும் விலகியிருந்தார். இந்த நிலையில் ஆயுஷ் மாத்ரேவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆாஷ் மத்வாலை சிஎஸ்கே 30 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

2019-ல் ஆகாஷ் மத்வால் ஆர்.சி.பி. அணிக்கு நெட் பவுலராக செயல்பட்டார். பின்னர் மும்பை இந்தியன்ஸ் 2022-ல் அவரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. அந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2023-ல் சிறப்பாக விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தினார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிராக 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். 2024-ல் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

2025 சீசனில் ஆர்.ஆர். இவரை 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 4 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனால் இந்த வருடத்திற்கான ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. தற்போது சி.எஸ்.கே. அணியில் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com