

ஐபிஎல் 2026 சீசனின் 6-வது போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. 220 ரன்களுக்கு மேல் அடித்தும், மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்தும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. 201 ரன்கள் அடித்த போதிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் வெற்றிபெற முடியவில்லை. இந்த அணியும் பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தும்.
இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 30 முறை மோதியுள்ளன. இதில் 20 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 10 முறை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அதிகபட்சமாக 278 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 208 ரன்னாகும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 113 ஆகும். கொல்கத்தா நைட் டைர்ஸ் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 101 ஆகும்.
டேவிட் வார்னர் 59 பந்தில் 126 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கவுதம் கம்பீர் 60 பந்தில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடித்துள்ளார்.
டேவிட் வார்னர் 15 போட்டிகளில் 619 ரன்கள் குவித்துள்ளார். நிதிஷ் ராணா 14 போட்டிகளில் 492 ரன்கள் சேர்த்துள்ளார்.
அந்த்ரே ரஸல் 20 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். புவனேஷ்வர் குமார் 25 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.