ஐபிஎல் 2018- டெல்லிக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

வாட்சன், டோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 212 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #CSKvDD
ஐபிஎல் 2018- டெல்லிக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
Published on

முதல் நான்கு ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள்தான் எடுத்திருந்தது. 5-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் இரண்டு சிக்சரும், டு பிளிசிஸ் ஒரு சிக்சரும் விளாசினார்கள். 6-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் சிக்சருக்கு தூக்கினார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. கடைசி பந்தை டு பிளிசிஸ் பவுண்டரிக்கு விரட்டினார்.

7-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரிலும் வாட்சன் இரண்டு சிக்சர் அடித்தார். 9-வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி 25 பந்தில் அரைசதத்தை கடந்தார் வாட்சன். சென்னை அணி 10.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

சென்னை அணி 10.5 ஓவரில் 102 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. விஜய் சங்கர் பந்தில் டு பிளிசிஸ் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 1 ரன் எடுத்த நிலையில் மிஸ்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு வாட்சன் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது வாட்சன் 78 ரன்னில் மிஸ்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் இந்த ரன்னைக் குவித்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 13.5 ஓவரில் 130 ரன்கள் எடுத்திருந்தது.

4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். 16 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 149 ரன்கள் எடுத்திருந்தது. 17-வது ஓவரை டிரென்ட் போல்டு வீசினார். இந்த ஓவரில் டோனி இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியும், அம்பதி ராயுடு ஒரு பவுண்டரியும் அடிக்க சென்னை அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. 18-வது ஓவரை பிளங்கெட் வீசினார். இந்த ஓவரில் ராயுடு இரண்டு பவுண்டரியும், ஒரு சிக்சரும் விளாசினார்.

19-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளை அபாரமாக வீசிய அவேஷ் கான், கடைசி பந்தில் டோனிக்கு சிக்ஸ் ஒன்று விட்டுக்கொடுத்தார். இதனால் 19 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்கோர் 198 ஆக உயர்ந்தது.

கடைசி ஓவரை போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்தில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3-வது பந்தில் டோனி சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னையின் ஸ்கோர் 205 ஆக உயர்ந்தது. 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 209 ரன்னாக உயர்ந்தது. 5-வது பந்தில் அம்பதி ராயுடு ரன்அவுட் ஆனார். அவர் 24 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com