IPL 2026 | ஆரஞ்சு கேப் பட்டியல்: முதலிடம் பிடித்தார் கிளாசன்

ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறது.
IPL 2026 | ஆரஞ்சு கேப் பட்டியல்: முதலிடம் பிடித்தார் கிளாசன்
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 48 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இன்று ஐதராபாத்தில் நடைபெறும் 49-வது லீக் போட்டியில் ஐதராபாத், பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா களமிறங்கினார். அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 13 பந்தில் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய கிளாசன் அதிரடியில் மிரட்டி அரை சதம் கடந்தார்.

இந்நிலையில், ஹென்ரிச் கிளாசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 11 ஆட்டங்களில் 476 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் அபிஷேக் சர்மா 475 ரன்னும், 3வது இடத்தில் கே.எல்.ராகுல் 445 ரன்னும் குவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com