

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்கத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் அதிரடி ஆட்டம் மீண்டெழுந்தது. கடைசியாக விளையாடி ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் சொந்த மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹெய்ன்ரிச் கிளாசன் இத்தொடர் தொடங்கியதில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த போட்டிக்கு முன்னதாக அனைத்து போட்டிகளிலும் 25 ரன்களுக்கு மேல் குவித்திருந்ததார். இந்த போட்டியில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இதன்மூலம் தொடர்ந்து 25 ரன்களுக்கு மேல் அடித்து வந்த அவரது சாதனை முடிவுக்கு வந்துள்ளது.
10 போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 425 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.