IPL 2026 | பட்லர் - கில் அதிரடி: டெல்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்

குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது.
IPL 2026 | பட்லர் - கில் அதிரடி: டெல்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி-குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சுதர்சன் களமிறங்கினர். இதில் சுதர்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பட்லர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரி அடங்கும்.

இதனை தொடர்ந்து சுப்மன் கில்- வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் 33 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com