

புதுடெல்லி:
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் இன்று முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரின் தொடக்க போட்டியில் ஆர்சிபி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளனர்.
இந்த நிலையில், குஜராத் அணி வீரர் கிளென் பிலிப்ஸ் இடது கை பேட்ஸ்மேனாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வலது கை பேட்ஸ்மேனான அவர் கிளென் பிலிப்ஸ் தொடர்ந்து இடது கை பேட்ஸ்மேனாக மாறி சிக்ஸர்களை விளாசி வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்தின் சூப்பர் ஸ்மாஷ் தொடரில், இடது கை பேட்ஸ்மேனாக மாறி ஒரு சிக்ஸர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இது குறித்து குஜராத் அணி நிர்வாகம் கூறுகையில், பிலிப்ஸ் சிறுவயது முதலே இரு கைகளிலும் பேட்டிங் செய்ய பயிற்சி பெற்றுள்ளதாகவும், இது போட்டிச் சூழலில் அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.