ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் - அரியானாவில் 4 பேர் கைது

அரியானாவின் கைதால் பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #VivoIPL #CricketBetting
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் - அரியானாவில் 4 பேர் கைது
Published on

கைதால்:

ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டுகள் நேற்று மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரியானா மாநிலத்தின் கைதால் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். 

அவர்கள் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி - பெங்களூரு இடையேயான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையின்போது ரூ.5500 பணமும், ஆறு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VivoIPL #CricketBetting

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com