

ஐபிஎல் 2026 தொடரின் 2-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் தனது தனது அறிமுக போட்டியிலேயே 'ஆட்ட நாயகன்' விருதை வென்று ஷர்துல் தாக்கூர் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு ஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2018 முதல் 2021 வரை மற்றும் 2024 என மொத்தம் ஐந்து சீசன்களில் 56 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த ஐந்து சீசன்களிலும் ஒருமுறை கூட அவர் 'ஆட்ட நாயகன்' விருதை வென்றதில்லை. ஆனால், தனது சொந்த ஊர் அணியான மும்பை இந்தியன்ஸில் இணைந்த முதல் போட்டியிலேயே இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து 2 கோடி ரூபாய்க்கு மும்பை அணிக்கு மாற்றப்பட்ட ஷர்துல் தாக்கூர், முதல் போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்துள்ளார்.
மேலும் இதனை வைத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை வைத்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.