VIDEO: ஏமாற்றிய திக்வேஷ்... நடுவரின் தப்பான முடிவால் 9 ரன்களுடன் வெளியேறிய பின் ஆலன்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகிறது.
VIDEO: ஏமாற்றிய திக்வேஷ்... நடுவரின் தப்பான முடிவால் 9 ரன்களுடன் வெளியேறிய பின் ஆலன்
Published on

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் - ரகானே களமிறங்கினர். இந்த ஜோடி முதல் ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 2-வது ஓவரை பிரின்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஆலன் 2 பவுண்டரிகளை விளாசினார். அதற்கு அடுத்தை பந்தை அதிரடியாக விளையாடினார். பந்து பேட்டின் முனையில் பட்டு தேர்ட் மேன் திசைக்கு சென்றது. அங்கு பவுண்டரி லைனில் நின்ற திக்வேஷ் ரதி கேட்ச் பிடித்து எல்லை கோட்டை காலால் மிதித்தார். இதனை அவரும் கவனித்தது போல இருந்தது.

ஆனால் 3-வது நடுவர் அதைச் சோதித்துக்கூடப் பார்க்காமல், அவரை ஆட்டமிழந்ததாக அறிவித்தார். இதனால் அவர் 8 பந்தில் 9 ரன்களுடன் வெளியேறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com