

ஐ.பி.எல். 2026 சீசன் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இதனால் முதல் ஏழு போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்தது. அதன்பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆர்.சி.பி. எதிர்கொண்டது. இதில் ஆர்.சி.பி. 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதன்பின் ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில் ஆர்.சி.பி. அணி 23 ரன்களில் வெற்றி பெற்றது. பரவாயில்லை நண்பர்களே. ஆனால், திரும்பவும் இதை செய்ய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடும்போது 4.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்ததை, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
ஆர்.சி.பி. அணி கொல்கத்தாவுக்கு எதிராக கடந்த கால ஐபி.எல். போட்டியில் 49 ரன்களில் ஆல்அவுட் ஆகியிருந்தது. அதை கிண்டல் செய்யும் வகையில் பஞ்சாப் கிங்ஸ் குறிப்பிட்டிருந்தது. இதற்கு தற்போது ஆர்.சி.பி. பதிலடி கொடுத்துள்ளது.
பஞ்சாப் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்பது சந்தேகமாக உள்ளது.