IPL 2026 | சி.எஸ்.கே.-வுக்கு மேலும் பின்னடைவு- முக்கிய அதிரடி வீரர் தொடக்க போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தகவல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் முதல் 2 அல்லது 3 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது
IPL 2026 | சி.எஸ்.கே.-வுக்கு மேலும் பின்னடைவு- முக்கிய அதிரடி வீரர் தொடக்க போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தகவல்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான எம்.எஸ். தோனி காயம் காரணமாக இரண்டு வாரங்கள் விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் கடைசி வரை விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த அணியின் அதிரடி வீரரான டெவால்டு பிரேவிஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதாம். அவர் side strain காயத்தால் அவதிப்பட்டு வருவதால் முதல் 2 முதல் 3 போட்டிகளில் விளையாட முடியாதாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டெவால்டு பிரேவிஸ் அணியில் இடம் பெறவில்லை என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com