

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், டெல்லி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.