நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கம்மின்ஸ்

இது கடினமான ஆடுகளம்தான். நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கம்மின்ஸ்
Published on

மும்பை:

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதாவது:

இது கடினமான ஆடுகளம்தான். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை. நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.

மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் 160 ரன்கள் என்பது இந்த ஆட்டத்தில் குறைவான இலக்காக மாறிவிட்டது.

இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற விக்கெட்டுகள் தேவை. இம்பாக்ட் வீரர் ஒன்று அல்லது இரண்டு ஓவர் தான் வீசமுடியும் என எனக்கு தெரியும். இதனால் தான் நாங்கள் ராகுலை தேர்வு செய்தோம். இந்த சூழலில் இருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இந்த சீசனில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது எங்களுக்கு சிறிய ஒரு பிரேக் கிடைத்துள்ளது. நாங்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com