IPL 2026: சிஎஸ்கே பிரச்சினையே கேப்டன்ஷி தான்- கெய்க்வாட்டை தாக்கிய பாலாஜி

ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டனை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
IPL 2026: சிஎஸ்கே பிரச்சினையே கேப்டன்ஷி தான்- கெய்க்வாட்டை தாக்கிய பாலாஜி
Published on

சென்னை:

ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டனை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பாலாஜி கூறியதாவது:-

ஒரு நல்ல கேப்டன் தனது இரண்டாம் நிலை பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்படும்போது, அவர்களின் ஓவர்களை முடித்துவிடுவார். இது இறுதியில் 20 ரன்களை சேமிக்கும். ஓவர்டனைப் போல, இரண்டு ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த ஒருவரை, பிறகு மீண்டும் அழைத்து 40 ரன்களைக் கொடுப்பதில் என்ன பயன்?

அவர் நன்றாகப் பந்துவீசிக் கொண்டிருந்தபோதே, அவரது நான்கு ஓவர்களையும் முடித்திருக்க வேண்டும். டெத் ஓவர்களில் ஓவர்டன் நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளைத் எடுத்து ஆட்டத்தை வென்று தருவாரா?.

ஓவர்டனை டெத் ஓவர்களில் பயன்படுத்தினால், ஆட்டமே அங்குதான் முடிந்துவிடும். டாப் ஆர்டர் பேட்டிங் முதல் பந்துவீச்சு, கேப்டன்சி உட்பட சிஎஸ்கேவுக்கு தற்போது அனைத்துத் துறைகளிலும் சிக்கல்கள் இருப்பது போல் உணர்கிறேன் என்று விமர்சித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com