பவர்பிளேயில் 2-வது வீரராக வித்தியாசமான சாதனை படைத்த பட்லர்- முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர்

டெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய பட்லர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பவர்பிளேயில் 2-வது வீரராக வித்தியாசமான சாதனை படைத்த பட்லர்- முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர்
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி-குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சுதர்சன் களமிறங்கினர். இதில் சுதர்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பட்லர் களமிறங்கினர். கடந்த 2 போட்டிகளில் சொதப்பிய அவர் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக விளையாடினார்.

அவர் 24 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினர். அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரி அடங்கும்.

பவர் பிளேக்குள் 5 சிக்சர்கள் விளாசியதன் மூலம் தொடக்க வீரர் அல்லாத ஒரு வீரர், இன்னிங்ஸின் முதல் 6 ஓவர்களுக்குள் (பவர்பிளே) அதிக சிக்ஸர்கள் விளாசிய பட்டியலில் பட்லர் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக 2014-ல் 6 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com