

சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடி ஆர்சிபி 250 ரன்கள் குவித்தது. பின்னர் 251 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே 207 ரன்னில் சுருண்டு 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஆர்.சி.பி. வீரர் புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் விக்கெட்டாக ஆயுஷ் மாத்ரேவை 1 ரன்னில் வீழ்த்தினார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் புவனேஷ்வர் குமாரின் 200-வது விக்கெட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன்னதாக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தற்போது அவர் 224 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இவர்கள் இருவரையும் தவிர்த்தி டி20 பிளாஸ்ட் தொடரில் பிரிக்ஸ் (268), சமித் பட்டேல் (230), கிறிஸ் வுட் (210), டேவிட் பெய்ன் (210) 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.
பவர்பிளேயில் மட்டும் 81 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் முதல் ஓவரில் 27 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். டிரென்ட் போல்ட் முதல் ஓவரில் 32 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
2016 மற்றும 2017 சீசன்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.