

நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அணிகளுக்கு இடையிலான மோதல் ஒருபுறம் இருக்க, வீரர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சாதனைகளுக்கான போட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 192 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணி 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான பர்பிள் கேப் பட்டியலில் ஆர்.சி.பி.யின் புவனேஷ்வர்குமார் முதலிடத்துக்கு முன்னேறினார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக அவர் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து, புவனேஷ்குமார் 12 போட்டிகளில் 22 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்தார்.
அடுத்த இடத்தில் ரபாடா உள்ளார். அவர் 12 போட்டிகளில் 21 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.