

புதுடெல்லி:
ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு டெல்லியின் ராஜா கார்டன் பகுதியில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையின்போது ரூ.2.80 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஒரு லேப்டாப், ஒரு எல்.ஈ.டி. டிவி ஸ்கீரின், 9 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த நான்கு மாதமாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், நேற்று முன்தினம் நடைபெற்ற டெல்லி - சென்னை இடையேயான ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு பந்தின் அடிப்படையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கைதானவர்கள் கூறியுள்ளனர். #VivoIPL #CricketBetting