

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக்ப பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரகானே, பின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் கொல்கத்தா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் குவித்தது.
4-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் ரகானே சிக்சருக்கு பறக்க விட்டார். 3-வது பந்தில் லெக் பைஸ் மூலம் ஒரு ரன் கிடைத்தது.
4-வது பந்தில் பின் ஆலன் பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தை வைடாக வீசினார். 5-வது மற்றும் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் லெக் பைஸை தவிர்த்து 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 2-வது முறையாக அதிக ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். முன்னதாக 2024-ல் வான்கடேயில் சிஎஸ்கே-வுக்கு எதிராக 26 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.
மும்பை இந்தியன்ஸ்:-
ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரூதர்போர்டு, நமன் திர், ஷர்துல் தாகூர், மயங்க் மார்கண்டே, ஏ.எம. கஜன்பார், டிரென்ட் போல்ட்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-
பின் ஆலன், ரகானெ, கேமரூன் கிரீன், ரகுவன்ஷி, ரிங்கு சிங், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்ரவர்ததி, வைபவ் அரோரா, முசாரபானி