

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 52-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.இதையடுத்து, குஜராத் அணி முதலில் களமிறங்கியது.
கில் , சாய் சுதர்சன் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு ரன்களை குவித்தனர். சாய் சுதர்சன் 55 ரன்களும், கில் 84 ரன்களும் எடுத்தனர். பின்னர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணியால் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் குஜராத் அணி 7-வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.