IPL 2026 | அசத்தல் லிஸ்ட்-இல் முதலிடம்... விராட் கோலி சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி..!

2016 மற்றும் 2024 ஆண்டுகளில் விராட் கோலி 38 சிக்சர்களை விளாசியிருந்தார்.
IPL 2026 | அசத்தல் லிஸ்ட்-இல் முதலிடம்... விராட் கோலி சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி..!
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அசத்தல் சாதனை படைத்துள்ளார். ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நடப்பு 2026 ஐ.பி.எல். தொடரில் இதுவரை 43 சிக்ர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

இதன் மூலம் இவர் அபிஷேக் சர்மா, ஸ்ரேயஸ் அய்யர் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் படைத்த சாதனைகளை முறியடித்துள்ளார்.

கடந்த 2024 ஐ.பி.எல். தொடரில் அபிஷேக் சர்மா 42 சிக்சர்களும், 2025-ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் அய்யர் 39 சிக்சர்களும், 2016 மற்றும் 2024 ஆண்டுகளில் விராட் கோலி 38 சிக்சர்களும், சூர்யகுமார் யாதவ் கடந்த 2025-ஆம் ஆண்டில் 38 சிக்சர்கள் அடித்தது ஒரு ஐ.பி.எல். தொடரில் இந்திய வீரர்கள் அடித்த அதிக சிக்சர்களாக இருந்தது.

அந்த வகையில், நடப்பு ஐ.பி.எல். டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை 43 சிக்சர்களை அடித்து ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

இன்று (மே 17) டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 46 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com