IPL 2026 : சூர்யவன்ஷி அதிரடி.. கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
IPL 2026 : சூர்யவன்ஷி அதிரடி.. கொல்கத்தாவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்
Published on

2026 ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 28வது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்த்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற உள்ளது.

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் வீச, ராஜஸ்தான் அணி பேட்டிங் இறங்கியது.

ஆட்டத்தை அதிரடியாகத் தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்கள் எடுத்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39 ரன்கள் சேர்த்தார். சுனில் நரைன் பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் ரியான் பராக் 12, ஷிம்ரோன் ஹெட்மயர் 15 மற்றும் ரவீந்திர ஜடேஜா 9 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவர்களில் ஜடேஜா, ஹெட்மயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை கார்த்திக் தியாகி வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் மற்றும் ரியான் பராக் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். சுனில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com