IPL 2026 | சன்ரைசர்ஸ் அபார பந்துவீச்சு... ராஜஸ்தானை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்

ராஜஸ்தான் சார்பில் ஃபெரரியா 69 ரன்களை குவித்து அசத்தினார்.
IPL 2026 | சன்ரைசர்ஸ் அபார பந்துவீச்சு... ராஜஸ்தானை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 21-ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஐதராபாத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் கேப்டன் இஷான் கிஷன் 44 பந்துகளில் 91 ரன்கள் (8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய ஹென்ரிட்ச் கிளாசன் 26 பந்துகளில் 40 ரன்கள் (4 சிக்சர்கள்) விளாசினார்.

217 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 1 ரன்னுக்கும், இவருடன் களமிறங்கிய மற்றொரு துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய துருவ் ஜூரெல் மற்றும் ப்ரெடோரியஸ் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி ஏமாற்றினர். இவர்களை தொடர்ந்து களத்திற்கு வந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் ஃபெரரியா நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி பொறுப்பான ஆட்டம் காரணமாக ஓரளவுக்கு ஸ்கோர் அதிகரித்தது. எனினும், ஜடேஜா 45 ரன்களும், ஃபெரரியா 69 ரன்கள் எடுத்த போது அவுட் ஆகினர்.

போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் சார்பில் ப்ரஃபுல் ஹிஞ்ச் மற்றும் ஷகிப் ஹொசைன் தலா 4 விக்கெட்டுகளையும் இஷான் மலிங்கா 2 விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com