IPL 2026 | தொடர் தோல்வி குறித்த கேள்வி... ஆதங்கத்தில் பேசிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர்

சமீபத்திய தொடர் தோல்விகள் அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
IPL 2026 | தொடர் தோல்வி குறித்த கேள்வி... ஆதங்கத்தில் பேசிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர்
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ். ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆறு போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

இதன் காரணமாக 2026 ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிகளுக்கான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் முன்னணியில் இருந்தது. எனினும், பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய நிலையிலும், சமீபத்திய தொடர் தோல்விகள் அந்த அணி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வரிசையில், நேற்றிரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் அந்த அணி தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. நேற்றைய போட்டிக்கு பிறகு பேட்டியளித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்ட்ன் ஸ்ரேயாஸ் அய்யர் சூழ்நிலையை சுட்டிக்காட்ட விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜீரணிக்க கடினமான விஷயம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அது ஒரு சிறந்த கிரிக்கெட் போட்டியாக இருந்தது. திலக் வர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், மேலும் களத்தை நேர்த்தியாக கையாண்டார் - அவருக்கு பாராட்டுக்கள்.

ஒரு கட்டத்தில், நாங்கள் 170-180 ரன்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் ஓமர்சாய் ஆட்டத்தின் போக்கை எங்களுக்கு சாதகமாக மாற்றினார். 200 ரன்களை எட்டியது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடு. அடுத்த வாய்ப்பைப் பற்றி நிச்சயமாக உற்சாகமாக இருக்கிறேன். இது ஒரு மதிய நேரப் போட்டி, நாங்கள் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் - விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com