LSG | அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த எல்.எஸ்.ஜி. வீரர்கள்

ஐபிஎல் 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர்கள் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்
LSG | அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த எல்.எஸ்.ஜி. வீரர்கள்
Published on

ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி போட்டிக்கு முந்தைய பயிற்சியை தொடங்கியுள்ளது. கேப்டன் ரிஷப் பண்ட் இழந்த ஃபார்மை மீண்டும் பெறும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த அணி இந்த முறை சிறப்பான முறையில் விளையாட தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கோயன்கா, ரிஷப் பண்ட் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீரர் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 14 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 7-வது இடத்தை பிடித்து பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி எதிர்கொள்கிறது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், மார்க்கிராம், மேத்யூ பிரிட்ஸ்கீ, ஜோஷ் இங்கிலிஸ், ஆயுஷ் படோனி, அப்துல் சமாத் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com