

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 37-ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணி ஆரம்பத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
போட்டிக்கு பிறகு, பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சீரற்ற பவுன்சையும் நிலையற்ற வேகத்தையும் கொண்டிருந்த ஆடுகளத்தை பற்றிப் பேசிய கெய்க்வாட், ஆரம்பத் திட்டங்கள் இருந்தபோதிலும் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடுவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து பேசிய அவர் "உண்மையைச் சொல்லப்போனால், சில சமயங்களில் சூழலை அந்த விதமாக மதிப்பிடுவது எனக்குப் பிடிக்காது; இருப்பினும், அது ஒரு சவாலான காரியமாகவே எனக்குத் தோன்றியது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பந்து சற்று நின்று வந்தது; பந்தின் வேகம் சீரற்று இருந்ததுடன், பவுன்சும் (bounce) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால், நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்திருக்காவிட்டால், எங்களால் 170 முதல் 180 ரன்கள் வரை எட்டியிருக்க முடியும்.
உண்மையை சொன்னால், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, இங்குள்ள களச் சூழலை மதிப்பிடுவது மிகவும் கடினம். கடந்த மூன்று போட்டிகளின் மூலம், ஆட்டம் எந்த திசையில் செல்லும் என்பதை நாங்கள் ஓரளவு கற்றுக்கொண்டோம். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆட்டங்களில் வெற்றிபெற எங்களுக்கு 60 முதல் 70 சதவீதம் வாய்ப்பிருந்தது.
ஆனால், இன்றைய ஆட்டம் இந்த விதமாக அமையும் என்று நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்களால் களச் சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளவே இயலவில்லை," என்றார்.