IPL 2026 | மும்பை அணிக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
 IPL 2026 | மும்பை அணிக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
Published on

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 13-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

கவுகாத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி துவக்கம் கொடுத்தனர்.

சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்கள் (1 பவுண்டரி, 5 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜெயஸ்வால் அதிகபட்சமாக 32 பந்துகளில் 77 ரன்கள் (10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார்.

மும்பை சார்பில் கஸன்ஃபர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com