

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 64-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. ஜெய்பூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு துவக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முறையே 96 மற்றும் 60 ரன்ளை குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு 35 ரன்களை விளாசினார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களை குவித்தது.
ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 43 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய துருவ் ஜூரெல் 38 பந்துகளில் 53 ரன்களை குவித்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபெரரியா 6 ரன்களை சேர்த்தார். ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.