IPL 2026 | விராட் கோலி அதிரடி... 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஆர்.சி.பி.

விராட் கோலி சிறப்பாக ஆடி சதம் விளாசினார்.
IPL 2026 | விராட் கோலி அதிரடி... 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஆர்.சி.பி.
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 57-ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் ஃபின் ஆலென் முறையே 19 மற்றும் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 46 பந்துகளில் 71 ரன்களையும், கேமரூன் கிரீன் 24 பந்துகளில் 32 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 49 ரன்களையும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் மற்றும் ரசிக் சலாம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பெங்களூரு அணி 193 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது.

ஆர்.சி.பி. அணியின் துவக்க வீரரான ஜேக்கப் பெத்தெல் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூன்றாவது வீரராக களத்திற்கு வந்த தேவ்தத் படிக்கல் நிதானமாக ஆடி 27 பந்துகளில் 38 ரன்களையும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஜத் பட்டிதார் 11 ரன்களும் எடுத்தனர்.

போட்டி முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தயாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்.சி.பி. தரப்பில் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன்களை விளாசினார். கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com