

ஐ.பி.எல். 2026 கிரிககெட் தொடரின் 24-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர் ரியான் ரிக்கிள்டன் 2 ரன்களிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் நடையை கட்டினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நமன் திர் நிதான ஆட்டம் ஆட, மறுப்பக்கம் குவிண்டன் டி காக் அபாரமாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
டி காக் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 112 ரன்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய நமன் திர் 3 பந்துகளில் 50 ரன் குவித்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையம், மார்கோ யான்சென் மற்றும் சஷாங்க் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
196 ரன்களை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரரான ப்ரியான்ஷ் ஆர்யா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.
இவருடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடினார். போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பஞ்சாப் சார்பில் பிரப்சிம்ரன் சிங் அதிகபட்சமாக 80 ரன்களை குவித்தார். மும்பை தரப்பில் கசான்ஃபர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட் கைப்பற்றினர்.