

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 29-ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
பஞசாப் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ப்ரியான்ஷ் ஆர்யா சிறப்பாக ஆட மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் ரன் ஏதும் எடுக்காமல் தனது விகிகெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து களமிறங்கிய கூப்பர் கனொலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ப்ரியான்ஷ் தன் பங்கிற்கு 37 பந்துளில் 93 ரன்களை விளாச, கனொலி 46 பந்துகளில் 87 ரன்களை விளாசினர். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 254 ரன்களை குவித்தது.
கடின இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் ஆயுஷ் பதோனி நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் முறையே 40 மற்றும் 35 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். அடுத்து வந்த ஏய்டன் மார்க்ரம் 22 பந்துகளில் 42 ரன்களை அடித்து அவுட் ஆனார். மறுபுறம் முகுல் சவுத்ரி 17 பந்துகளில் 21 ரன்களை குவித்தார்.
போட்டி முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.