ஐபிஎல் 2026: தீவிர பயிற்சியில் எம் எஸ் தோனி: வைரலாகும் வீடியோ

சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
ஐபிஎல் 2026: தீவிர பயிற்சியில் எம் எஸ் தோனி: வைரலாகும் வீடியோ
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அவர் இரண்டு முறை கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.

தோனி பிறகு அணியின் கீப்பராக சஞ்சு செயல்படுவார் என சொல்லப்படுகிறது. எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்நிலையில் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்காக பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com