IPL 2026 | பேட்டிங்கில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ்... கொல்கத்தா அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது!

மும்பை இந்தியன்ஸ் சார்பில் கார்பின் போஷ் 18 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.
 IPL 2026 | பேட்டிங்கில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ்... கொல்கத்தா அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது!
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 65-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரன ரியான் ரிக்கில்டன் 6 ரன்களுக்கு அவுட் ஆக, இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். நமன் திர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக மும்பை அணி ரன் குவிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்தடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 15 ரன்களும், திலக் வர்மா 20 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்பின் போஷ் 18 பந்துகளில் 32 ரன்களை விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை குவித்தது.

கொல்கத்தா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சௌரப் தூபே, கார்த்திக் தியாகி மற்றும் கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com