IPL 2026 | திலக் வர்மா அதிரடியால் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்!

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
IPL 2026 | திலக் வர்மா அதிரடியால் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 58-ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அண்யின் ப்ரியன்ஷ் ஆர்யா 22 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 57 ரன்களும், கூப்பர் கனொலி 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆரம்பத்தில் நல்ல ரன்ரேட் கிடைத்த நிலையில், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கடைசியில் களமிறங்கிய ஓமர்சாய் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 17 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஷ்னு வினோத் மற்றும் சேவியர் பார்ட்லெட் முறையே 15 மற்றும் 18 ரன்களை சேர்த்தனர். இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் சார்பில் சிறப்பாக பந்தவீசிய ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும், கார்பின் போஷ் மற்றும் ராஜ் பவா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

201 ரன்களை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கிள்டன் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ரோகித் சர்மா 25 ரன்களும், ரிக்கிள்டன் 48 ரன்களும் சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய நமன் திர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் திலக் வர்மா மற்றும் வில் ஜாக்ஸ் ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் 19.5 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 75 ரன்களை விளாசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com