IPL 2026 | கொல்கத்தா அணியை கதறவிட்ட சன்ரைசர்ஸ்... 65 ரன்களில் அபார வெற்றி

கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
IPL 2026 | கொல்கத்தா அணியை கதறவிட்ட சன்ரைசர்ஸ்... 65 ரன்களில் அபார வெற்றி
Published on

2026 ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற தொடரின் 6-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் துவக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி ரன்குவித்தனர்.

டிராவிஸ் ஹெட் 46 ரன்கள் (6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), அபிஷேக் சர்மா 48 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் இஷான் கிஷன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய ஹென்ரிச் கிளாசன் 35 பந்துகளில் 52 ரன்கள் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்களை குவித்தது.

கொல்கத்தா அணி சார்பில் பிளெசிங் முசர்பானி 4 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், கார்திக் தியாகி மற்றும் அன்குல் ராய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ரஹானே 8 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலென் 7 பந்துகளில் 28 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினார். பிறகு களமிறங்கிய அங்ரிஷ் ரகுவன்ஷி 29 பந்துகளில் 52 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் சார்பில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளையும், ஈஷன் மலிங்கா, நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளையும், ஹார்ஷ் துபே 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com