IPL 2026: குஜராத்தை துவம்சம் செய்த கொல்கத்தா.. 29 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

53 (28) ரன்களுடன் கடைசி வரை சாய் சுதர்ஷன் களத்தில் நின்றார்.
IPL 2026: குஜராத்தை துவம்சம் செய்த கொல்கத்தா.. 29 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி
Published on

ஐ.பி.எல். 2026-ன் 60-வது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் ரகானே, பின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரகானே 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து பின் ஆலன் உடன் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின் ஆலன் 35 பந்தில் 4 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 93 ரன்கள் விளாசினார்.

அடுத்து ரகுவன்ஷி உடன், கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

ரகுவன்ஷி 44 பந்தில் 82 ரன்கள் எடுத்தும், கிரீன் 28 பந்தில் 52 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது.

248 என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் - சுப்மன் கில் ஜோடி முதலில் களமிறங்கியது. 23 (13) ரன்களில் சாய் சுதர்ஷன் காயம் காரணமாக வெளியேற, அடுத்து களமிறக்கிய நிஷாந்த் சிந்து 1 ரன்னில் கேட்ச் ஆனார்.

மறுமுனையில் நின்று ஆடிய கில், 33 பந்துகளில் தனது அரைசதம் எட்டினார். அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 32 பந்துகளில் அரை சதத்தை பதிவு செய்தார்.

85 (49) ரன்களில் கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மீண்டும் களமிறங்கிய சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார்.

ஜோஸ் பட்லர் 57 (35) ரன்களுக்கு ஆட்டமிழக்க, சாய் சுதர்ஷன் 27 பந்துகளில் தனது அரை சதம் தொட்டார்.

53 (28) ரன்களுடன் கடைசி வரை சாய் சுதர்ஷன் களத்தில் நின்றார்.

இருப்பினும் இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே தொட்டது.

இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றிபெற்றது.

கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் இரண்டு விக்கெட்டுகளும், துபே மற்றும் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com