IPL 2026 | ரகுவன்ஷி, ரிங்கு சிங் அபாரம்... ஆர்.சி.பி.க்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
IPL 2026 | ரகுவன்ஷி, ரிங்கு சிங் அபாரம்... ஆர்.சி.பி.க்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 57-ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் அஜிங்கியா ரஹானே மற்றும் ஃபின் ஆலென் முறையே 19 மற்றும் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 46 பந்துகளில் 71 ரன்களையும், கேமரூன் கிரீன் 24 பந்துகளில் 32 ரன்களையும், ரிங்கு சிங் 29 பந்துகளில் 49 ரன்களையும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் மற்றும் ரசிக் சலாம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பெங்களூரு அணி 193 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com