

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 19-வது லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் இறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 11 ரன்னிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்னிலும் அவுட்டாகினர்.
பவர்பிளே முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. மார்கிராம் 30 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 31 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். முகமது சமி பந்தில் எய்டன் மார்க்ரம்க்கு கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.
அணியின் கேப்டன் சுப்மன் கில் 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். பிரின்ஸ் யாதவ் பந்தில் ரிஷப் பந்த்க்கு கேட்ச் குடுத்து அவுட் ஆனார்.
வாஷிங்க்டன் சுந்தர் 21 ரன்கள், சாய் சுதர்சன் 15 ரன்கள் எடுத்தனர். 18.4 ஓவரில் 165 ரன்கள் ஸ்கோர் செய்த குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.