IPL 2026: ஜுரேல், பராக் அரைசதம்.. ராஜஸ்தான் 193 ரன்கள் குவிப்பு

தொடக்க பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
IPL 2026: ஜுரேல், பராக் அரைசதம்..  ராஜஸ்தான் 193 ரன்கள் குவிப்பு
Published on

ஐபிஎல் தொடரின் 62 வது லீக் ஆட்டம் டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜுரேல் - சூர்யவன்ஷி ஜோடியில் சூர்யவன்ஷி 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ஜுரேல் - பராக் ஜோடி சேர்ந்தனர்.

அரை சதமடித்த பராக், 51 ரன்னிலும், ஜுரேல் 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட் எடுத்தார். 194 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com