

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 62-ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெயஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி முறையே 12 மற்றும் 46 ரன்களை குவித்தனர்.
அடுத்து வந்த துருவ் ஜூரெல் 53 ரன்களும், ஃபெரரியா 51 ரன்களையும் குவித்தனர். போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், நிகிடி மற்றும் மாதவ் திவாரி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
194 ரன்களை துரத்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு துவக்க வீரர்களான அபிஷேக் பொரெல் மற்றும் கே.எல். ராகுல் முறையே 51 ரன்கள் மற்றும் 56 ரன்களை விளாசினர். பிறகு களமிறங்கிய கேப்டன் அக்சர் படேல் 18 பந்துகளில் 34 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை குவித்தது. இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பிர்ஜேஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், தசுன் ஷனகா 1 விக்கெட் வீழ்த்தினர்.