IPL 2026 | சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐதராபாத் சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
IPL 2026 | சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
Published on

2026 ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 63-ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை அணிக்கு துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாசட் முறையே 27 மற்றும் 15 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய உர்வில் படேல் 13 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

டெவால்டு பிரெவிஸ் 27 பந்துகளில் 44 ரன்களும் ஷிவம் துபே 26 ரன்களை அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 180 ரன்களை குவித்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், சகிப் ஹூசைன் 2 விக்கெட்டுகளையும், ப்ரஃபுல் மற்றும் இஷான் மலிங்கா தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com