

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 44-வது லீக் போட்டி சென்னையில் இன்று நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் இறங்கியது.
முதலில் இறங்கிய வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் அவுட் ஆக வெளியேற ஜோடி சேர்ந்த ரிக்கல்டன் - நமன் திர் அதிரடியாக ஆடினர். ரிக்கல்டன் 37 ரன்களிலும் நமன் திர் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இறங்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. திலக் வர்மா 5, சூர்யகுமார் யாதவ் 21, ஹர்திக் பாண்ட்யா 18 என சொற்ப ரன்களில் தோற்றனர்.
ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்ய உள்ளது.
சென்னை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
160 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாம்சன் 11(9) ரன்களில் அவுட் ஆனார்.
அவருடன் களமிறங்கிய மற்றோரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேலுடன் ஜோடி சேர்ந்தார்.
24 (12) ரன்கள் அடித்திருந்தபோது ஏ.எம். கஸான்பர் வீசிய பந்தில் உர்வில் அவுட் ஆக, கார்த்திக் சர்மா, கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார்.
பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டை இழந்து சென்னை 62 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் 34 பந்துகளிலும் கார்த்திக் சர்மா 39 பந்துகளிலும் அரைசதம் கடந்தனர்.
ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுடனும், கார்த்திக் 54 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
18.1 ஓவர்களில் இலக்கை எட்டிய சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை தரப்பில் பும்ரா மற்றும் கஸான்பர் 1 விக்கெட் எடுத்தனர்.