IPL 2026 | சஞ்சு சாம்சன், நூர் அகமது அதிரடி... கொல்கத்தா அணியை வீழ்த்தியது சி.எஸ்.கே.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
IPL 2026 | சஞ்சு சாம்சன், நூர் அகமது அதிரடி... கொல்கத்தா அணியை வீழ்த்தியது சி.எஸ்.கே.
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 22-ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.

அடுத்து களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே 17 பந்துகளில் 38 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்), டெவால்டு பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்தனர்.

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி சார்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகள், வைபவ் அரோரா, அன்குல் ராய் மற்றும் சுனில் நரேன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

193 ரன்களை துரத்திய கொல்கத்தா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ஃபின் ஆலென் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சுனில் நரேன் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் ரஹானே மற்றும் ஆங்ரிஷ் முறையே 28 மற்றும் 27 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

போட்டி முடிவில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 32 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com