IPL 2026 | 23-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இணையும் வெஸ்ட் இண்டீஸ் முக்கிய வீரர்கள்
ஐ.பி.எல். 2026 சீசன் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. கொல்கத்தா அணியில் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த சுனில் நரனை், ரோவ்மேன் பொவெல் இடம் பிடித்துள்ளனர். அந்த்ரே ரஸல் ஓய்வு பெற்றாலும், பவர் கோச் பணியை செய்ய இருக்கிறார். இவர் பினிஷர் எவ்வாறு செயல்பட வேண்டும் என வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்.
அமெரிக்கா- ஈரான் போரால் வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் சரியாக இயங்காததால் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வருகிற 23-ந்தேதி (நாளை மறுநாள்) இந்தியா வந்தடைந்து அணியுடன் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகி வரும் நிலையில், இந்த செய்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஊக்கமான அமையும்.
ஐ.பி.எல். 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29-ந்தேதி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

