ஐ.பி.எல். 2024 - ஐதராபாத் அணிக்கு 215 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப்

பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார். நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 - ஐதராபாத் அணிக்கு 215 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப்
Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மே 19) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பஞ்சாப் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்களை அடித்தார். அடுத்து வந்த ரோசோ சிறப்பாக ஆடி 49 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் ஆடிய சஷாங்க் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது. ஐதராபாத் சார்பில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும், விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com